Categories
உலக செய்திகள்

மியான்மரில் ராணுவதினர் அட்டூழியம் … சுமார் 510 பேர் சுட்டுக்கொலை …தாக்குதலுக்கு பயந்து மக்கள் தப்பியோட்டம் …!!!

மியான்மர் ராணுவத்தினர் , இதுவரையில் சுமார் 510 போராட்டக்காரர்களை சுட்டுகொன்றுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் ஜனநாயக ஆட்சியை கலைத்து, ராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்றினர். இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராணுவப் படை வீரர்கள் ,பொது மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ,பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் போராட்டக்காரர்களை பகலில் தாக்கியும், இரவு நேரங்களில் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து ,கைது நடவடிக்கைகளிலும் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு கடந்த 27ஆம் தேதி சனிக்கிழமையன்று, மியான்மரில் ஆயுதப்படை தினத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு மக்களை , ஒரே நாளில் சுமார் 114 பேர் ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு உலக நாடுகளிலிருந்து கடும் கண்டனங்களை  தெரிவித்து வருகிறது. ஆனால் அதைப்பற்றி ராணுவத்தினர் கண்டுகொள்ளாமல், தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டு மாத காலமாக நடைபெற்ற , போராட்டங்களில் சுமார் 510 பேர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.

ராணுவத்தினர் தொடர்ந்து ,இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டு வருவதால், அமெரிக்கா வர்த்தக  பிரதிநிதியான காத்தரீன் கூறுகையில், மியான்மர் நாட்டுடன் வர்த்தக ரீதியான தொடர்புகளை நிறுத்திக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார் . இந்நிலையில் மியான்மர் நாட்டில் கெய்ன் மாகாணத்திலுள்ள ,கரேன் இனத்தை சேர்ந்த மக்கள் மீது, ராணுவத்தினர் விமானங்களைப் பயன்படுத்தி அப்பகுதியில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றும், மற்றவர்கள் அங்குள்ள காடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

Categories

Tech |