Categories
உலக செய்திகள்

அமீரகத்தில் தடையின்றி …கொரோனா தடுப்பூசி கிடைக்கும்… வெளியுறவு மந்திரி உறுதி …!!!

அமீரகத்தில் கொரோனா தடுப்பூசி அனைத்து மக்களுக்கும், கிடைக்கும்படி வழிவகை செய்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு மந்திரி கூறினார்.

அபுதாபியில் ‘ஹோப் கன்சோர்டியம்’  நிறுவனத்தின் சார்பாக காணொளி கூட்டமானது நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அமீரக மந்திரியான ஷேக் அப்துல்லா பின் ஜாயித் அல் நஹ்யான்  பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அவர் கூறுகையில்,  ‘ஹோப் கன்சோர்டியம்’ சரக்குப் போக்குவரத்தின்  சார்பில் ,அபுதாபியிலிருந்து உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும், கிட்டத்தட்ட ஓராண்டு காலத்திற்கு பிறகு  சர்வதேச சமூகமாக ஒன்றிணைந்துள்ளோம் ,என்று அவர் கூறினார்.

இதனால் மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலமாக , நல்ல முன்னேற்றம் ஏற்படும். உலக நாடுகள் முழுவதும் ஒன்றிணைந்து சர்வதேச அளவில் சுகாதார பாதுகாப்பிற்காக  செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் ‘ஹோப் கன்சோர்டியம்’ சரக்குப் போக்குவரத்தானது ஆயிரக்கணக்கான நிபுணர்களுடன், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் இணைந்து இந்தக் கூட்டமைப்பை நிறுவியுள்ளது . இவ்வாறு புதிய சரக்கு போக்குவரத்து தொடங்கி இருப்பதால் ,அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எந்தவொரு பாகுபாடுமின்றி அனைத்து நாட்டிற்கும் ,தடுப்பூசி கிடைக்கும்படி இந்த சரக்கு போக்குவரத்து செயல்படும் என்று தெரிவித்தார். அமீரகத்தில் இந்த சரக்கு போக்குவரத்து சர்வதேச மையமாக செயல்படுவதால், இக்கட்டான காலங்களிலும் தேவைப்படும் பொருட்களை , தங்கு தடையின்றி, அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய ஒத்துழைப்பு அளிக்கிறது. இதன் காரணமாக அமீரகத்தில் கொரோனா  தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் ,என்று பொதுமக்கள் கருதுகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்த மந்திரி ,அமீரகத்தில் வசிக்கும் ஒவ்வொரு பொதுமக்களுக்கும் ,பாகுபாடின்றி கொரோனா  தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Categories

Tech |