Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்பத்தூரில் அனுமதியின்றி நடத்தப்பட்டவை… ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு… 10 பேர் படுகாயம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டில் 10 பேருக்கு மாடு முட்டியதில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெடுமரத்தில் சிறப்பு வாய்ந்த மலையரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள கிராம மக்கள் இரு தரப்பினர் சார்பில் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். ஆனால் தற்போது மஞ்சுவிரட்டிற்கு தேர்தல் நடைபெறவிருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க இயலாது என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் கிராமத்தினர் சார்பில் மஞ்சுவிரட்டு நடத்தப்படவில்லை. இந்த நிலையில் திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுவட்டார கிராமங்களான ரணசிங்கபுரம், கும்மங்குடி ஊர் குலத்தான் பட்டி, திருவுடையார்பட்டி, கோட்டையிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து நெடுவயல் பகுதிகளில் ஆங்காங்கே சுமார் 500-க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டு மாடுகளை அவிழ்த்து விட்டனர்.

இந்த மஞ்சுவிரட்டில் ஏராளமான இளைஞர்கள் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கலந்து கொண்டு மாடுகளை பிடித்தனர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் மாடு முட்டியதில் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நாட்டரசன்கோட்டை பகுதியில் வசித்து வரும் செல்லமணி என்பவரது மகன் கரன் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதேபோல் தேர் திருவிழாவை முன்னிட்டு பட்டமங்கலம் பகுதியில் நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட காளை மாடுகள் மஞ்சுவிரட்டிற்கு அவிழ்த்து விடப்பட்டது.

Categories

Tech |