Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இதுல பணி செய்ய விருப்பம் இருந்தா விண்ணப்பிங்க…. காஞ்சியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு…. சூடுபிடிக்கும் தேர்தல் களம்….!!

காஞ்சிபுரத்தில் தேர்தல் பணியாற்ற விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் அரசாங்கம் முன்னாள் படை வீரர்களை தேர்தல் பணியில் சிறப்பு காவலராக பணியாற்ற ஏற்பாடு செய்துள்ளது. எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தலில் பணியாற்ற விருப்பமுள்ள மற்றும் உடல் பலமுள்ள 70 வயதுக்குட்பட்ட முன்னாள் படை வீரர்கள் https://bit.ly/Details of Retired Personnel reported for TNAE 2021 என்ற முகவரியில் முன்னாள் படை வீரர்களின் நல உதவி சங்க அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும் விண்ணப்பிக்க செல்லும் முன்னாள் படை வீரர்கள் அவர்களது வாக்காளர் அட்டை, படை விலக சான்று, அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை தங்களுடன் கொண்டு செல்ல வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |