Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்… பெரும் சோகம்…!!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோகர் சர்மா (80) இந்தூரில் சற்றுமுன் காலமானார். உலக மக்கள் அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பு, அவருக்கும் உறுதி செய்யப்பட்டது. அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் மத்திய பிரதேசம் மற்றும் சர்வீசஸ் அணிக்காக ரஞ்சி டிராஃபி, துலீப் டிராபி விளையாடியுள்ளார். மேலும் பேட்டிங் மட்டுமன்றி பகுதிநேர விக்கெட் கீப்பர் ஆகவும் இருந்துள்ளார். மத்திய பிரதேசம் மற்றும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு முக்கிய பிரபலங்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |