Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற பெண்ணிற்கு… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியில் உள்ள ஆலடியார் விதியில் கலைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். அதன்பின் கடந்த 28-ஆம் தேதி மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது அங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று சோதித்து பார்த்தார்.

அப்போது பீரோவில் இருந்த ரூ.20,000 மற்றும் 14 பவுன் நகை ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து சிவகங்கை தாலுகா காவல் நிலையத்தில் கலைச்செல்வி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |