பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 150 ரக மாடல் மற்றும் டாமினர் 400 பைக்களின் விலையை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 150 ரக மாடலின் விலையை ரூபாய் 479 இல் தொடங்கி ரூபாய் 2,980 வரை அதிகரித்துள்ளது. இந்த விலை மாற்றம் தனது மூன்று வேரியண்ட்டுகளாண நியான்,சிங்கிள் டிஸ்க் ஏ.பி.எஸ் மற்றும் ட்வின் டிஸ்க் ஏ.பி.எஸ்-களுக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது. இதேபோல் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பஜாஜ் டாமினர் 400-யின் விலையும் 6000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
68,752 ரூபாயாக இருந்த பஜாஜ் பல்சர் 150 நியனின் விலை 2,950 ரூபாய் அதிகரித்து 71, 200 ரூபாயாக மாறியுள்ளது. இதேபோல் பஜாஜ் பல்சர் 150 சிங்கிள் டிஸ்க் ஏ.பி.எஸ் மற்றும் ட்வின்-டிஸ்க் ஏ.பி.எஸ் விலையும் தலா ரூபாய் 489 உயர்ந்து தற்போது 84,960 ரூபாய் மற்றும் 88,838 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.2019 பஜாஜ் டாமினர் 400 விலை ரூபாய் 1.80 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
பஜாஜ் பல்சர் 150 மாடலில் 149 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சின் வழங்கப்பட்டுள்ளதால் 13.8 பிஎச்பி பவர், 13.4 என்.எம் செயல்திறனை வெளிப்படுத்துகிறது. இதேபோல் 373 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் மூலம் 37 பிஎச்பி பவர் 24 என்.எம் செயல் திறன் டாமினர் 400 மாடலில் கிடைக்கிறது. விலையில் மட்டும் மாற்றமே தவிர அனைத்து மோட்டார்சைகிளிலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.