தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையின் ரோந்து பணிக்கு பயன்படுத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி சிறைபிடித்து செல்வது வழக்கம். சிறைபிடித்து சென்று மீனவர்களின் படகுகளை பறித்து வைத்துக்கொண்டு அட்டூழியம் செய்து வருகின்றனர். அப்படி கடந்த சில வருடங்களில் சிறைப்பிடித்த மீனவர்கள் சிலரை விடுவித்தாலும் படகுகள் அவர்களிடம் இருந்தன.
இந்நிலையில் இலங்கை கடற்படையின் ரோந்து பணிக்கு தமிழக மீனவர்களின் படகுகளை பயன்படுத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு தமிழக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.