Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இவ்வளவு பேர் தான் ஊருக்கு போறாங்களா….? ஆர்வம் காட்டாத பொதுமக்கள்…. போக்குவரத்து கழக அதிகாரியின் பரபரப்பு தகவல்….!!

சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம்  காட்டவில்லை.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக நாளை முதல் 5ஆம் தேதி வரை 2225 தினசரி பேருந்துகளுடன் 3990 சிறப்பு பேருந்துகள் என மொத்தம்  14,215 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன.இந்நிலையில் 2644 சிறப்பு பேருந்துகள் கோவை, சேலம், பெங்களூர், திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட உள்ளன.

இதனையடுத்து 3ஆம் தேதி வரை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும், 4, 5 ஆகிய தேதிகளில் கேகே நகர், மாதவரம், தாம்பரம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்ற போதிலும், பொதுமக்கள் முன் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை எனவும், இதுவரை 10,000 பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர் எனவும் போக்குவரத்து கழக அதிகாரி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |