பாதாம் முந்திரி கேக் செய்ய தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு – 15
முந்திரிப் பருப்பு – 20
சர்க்கரை – 150 கிராம்
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
நெய் – 2 ஸ்பூன்
செய்முறை:
முதல்ல பாதாம், முந்திரிபருப்பை தனி தனி பாத்திரத்துல போட்டு, தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் நல்லா ஊற வைக்கனும்.
மேலும் ஊற வச்ச பாதாம் பருப்பில் உள்ள தோலை மட்டும் நீக்கியதும், அதனுடன் முந்திரியையும் எடுத்து மிக்ஸிஜாரில் போட்டு நைஸாக அரைச்சி எடுத்துக்கணும்.
பின்னர் அடுப்புல நாண் ஸ்டிக் தவாவை வைத்து சர்க்கரையும், தேவைக்கேற்ப தண்ணீரையும் சேர்த்து நல்லா கரையும் அளவுக்கு கொதிக்க வச்சதும், அதில் அரைச்சி வச்ச பாதாம் முந்திரி கலவையையும், ஏலக்காய்த்தூளையும் சேர்த்து நல்லா கிளறி விடணும்.
இறுதியில் கிளறி விட்ட கலவையானது, ஓரளவு கெட்டியாக வந்ததும், அதில் தேவைக்கேற்ப நெய் விட்டு கரண்டியால் கிளறி விட்டு நல்லா இறுகி கெட்டியாக வந்ததும், இதை நெய் தடவிய குழிவான பிளேட்டில் ஊற்றி, ஆற வைத்து, அதை துண்டுகளாக வெட்டி பரிமாறினால் ருசியான பாதம் முந்திரி கேக் ரெடி.