விஜயின் தளபதி 65 படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.
முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து விஜய்யின் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இந்நிலையில், பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் தளபதி 65 படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.மேலும் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
#Thalapathy65Poojai@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja #Thalapathy65 pic.twitter.com/BYm9yygzWj
— Sun Pictures (@sunpictures) March 31, 2021