சோனியாவின் அதிபர் ஜான் பாகுபலி இறுதி சடங்கில் 45 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தான்சானியா நாட்டின் அதிபர் இருந்தவர் ஜான் மகுஃபுலி (61) இவர் மக்கள் அனைவரின் மனதையும் கவர்ந்த சிறந்த அதிபராக தான்சானியாவில் விளங்கினார். இவரை மக்கள் “தி புல்டோசர்” என்று அழைப்பார்கள். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இதய நோயால் பாதிப்பு அடைந்ததாகவும் மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின்பு பலனின்றி உயிரிழந்ததாக கடந்த 17ஆம் தேதி கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜான் மகுஃபுலிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதிசடங்கு நடைபெற்றபோது அதில் ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக கூடியுள்ளனர். அப்பொழுது எதிர்பாராதவிதமாக மக்கள் நெரிசல் அதிகமாகி 10க்கும் மேற்பட்டவர்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கூறிய நிலையில் தற்போது 45 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜான் மகுஃபுலி இதயநோயால் இறந்துள்ளதாக தான்சானியா அரசு தெரிவித்தாலும் எதிர்க்கட்சியினர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.