ஏப்ரல் 4ம் தேதி அன்று இரவு 7 மணி வரை அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இதனையடுத்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள ஏப்ரல் 4ம் தேதி மாலை 5 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 2 மணி நேரம் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணி வரை வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யாலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்