Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொளுத்தும் வெயிலில்….” தினமும் ஒரு டம்ளர் மோர் சாப்பிடுங்க”… நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்..!!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் தினமும் நம் அன்றாட உணவில் மோர் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது என்று ஆய்வு கூறுகிறது.

கொளுத்தும் கோடை வெயிலில் நம்மை நாம் பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. கோடையில் உடல் சூட்டை தணிக்க நாம் கட்டாயம் குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வது முக்கியம். அதுவும் ஆரோக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும். இதில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

நன்மைகள் 

ஆயுர்வேதத்தில் மோர் ஒரு  சாத்வீக உணவாக கருதப்படும். தயிரில் இருந்து தயாரிக்கப்படும். இந்த பானம் மிகவும் நன்மையானது. ஒரு டம்ளர் மோர் பருகும் போது வயிற்றுக்கு அவ்வளவு நன்மையைத் தருகின்றது. குடல் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இது தீர்வாக உள்ளது.

உடல் எடையை குறைக்க விரும்புவோர் மோர் தினசரி எடுத்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ள இது உதவும். மோரில் கால்சியம், பொட்டாசியம், புரதம், வைட்டமின்கள் போன்ற தாதுக்கள் உள்ளதால் பசியை கட்டுப்படுத்தும். இதனால் உடல் எடை விரைவில் குறையும்.

உடலில் இருந்து அதிகப்படியான திரவம் வெளியேறும் போது ஒட்டுமொத்த ஆற்றலையும் நாம் இழக்கக்கூடும். கோடையில் நீர் இழப்பை தவிர்ப்பதற்கு உப்பு, சீரகம், கருப்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து மோரை தயாரித்து பருகினால் நீரிழப்பு கட்டுப்படுத்த முடியும்.

தினமும் 1,000 மில்லி கிராம் கால்சியம் நம் உடலுக்குத் தேவை . ஒரு கப் மோரில் 254 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. இதனை நாம் அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்ளும்போது 28% நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைத்து விடுகிறது.

130/80 என்ற அளவில் ரத்த அழுத்தம் தீர்மானிக்கப்படும். மோரில் பயோ ஆக்டிவ் புரதம் ஏராளமாக உள்ளதால், இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட இதை பயன்படுத்தினால் பிரச்சினைகளை சரி செய்து மலச்சிக்கலை நீக்கிவிடும். மேலும் செரிமான அமைப்பை சரிசெய்யவும் மோர் உதவும்.

Categories

Tech |