Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“நாடகத்தில் மூழ்கிய தாய்” 7-வயது மகளை சீரழித்த காமக்கொடூரன்..!!

திருச்சியில் நாடகம் பார்க்கும் ஆசையில் ஒரு பெண் வீட்டு வாசலில் மகளை தூங்க வைத்த பின் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகில் இருக்கும்  கிராமத்தில் கணவனை இழந்த ஒரு பெண் தனது 7 -வயது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இக்கிராமத்தில் மழை பொழிய வேண்டும் என்று வேண்டி அர்ச்சுனன் தபசு என்ற நாடகம் கடந்த 3 நாட்களாகவே  நடைபெற்று வருகிறது இந்த நாடகத்தைப் பார்ப்பதற்காக தாய் மற்றும் மகள் இருவரும் சென்றுள்ளனர். நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அந்தச் சிறுமி  உறங்கிக்கொண்டிருந்ததால்  தாய் தனது மகளை வீட்டின் வாசலில் படுக்க வைத்து விட்டு மீண்டும் நாடகம் பார்க்க சென்றுள்ளார். அதன் பின் 1 மணி நேரம் கழித்து அந்த சிறுமி கதறி அழுதவாறே நாடகம் நடக்கும் இடத்திற்கு வந்துள்ளார்.

Related image

இதையடுத்து தனது மகளின்  உடைகளில் ரத்தம் இருந்ததைக் கண்டு ஒரு கணம் அதிர்ச்சியடைந்த தாய், தனது மகளை உடனே முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்து பார்த்த  மருத்துவர்கள், அவர் பாலியல் கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்று அதிர்ச்சிகரமான தகவல் தெரிவித்தனர்.

Related image

பின்னர் இது தொடர்பாக,  மருத்துவர்கள் முசிறி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனிடையே சிறுமியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக மோசமாக இருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து சிறுமியைச் சீரழித்த காமக்கொடூரனை  போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |