மொசாம்பிக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டினரை 50 பேரின் தலையை வெட்டி உடலை தெருவில் வீசி உள்ளதால் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொசாம்பிக் நாட்டில் அமைந்துள்ள பால்மா பகுதியில் 53,000 அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.அது ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு தயாரிக்கும் பகுதியாக கருதப்படுகிறது. ஆனால் அந்தப் பகுதி ஒரு சுரங்க நகரமாக உள்ளது. இந்நிலையில் அந்தப் பகுதியை சுமார் 100 ஐ.எஸ் பயங்கர தீவிரவாதிகள் தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதனால் அப்பகுதியில் இருந்து சுமார் 1,400 அதிகமான மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டுள்ளனார்.
இந்நிலையில் அந்நாட்டில் 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் ஹோட்டல் ஒன்றில் தங்கி உள்ளனர். அதனால் அவர்கள் 17 வாகனங்களில் அந்நாட்டை சுற்றிப்பார்க்க வெளியேறியுள்ளனர். அப்போது அவர்கள் மீது ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த பயங்கர தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.அதில் சிலர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் அவர்களில் பல பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். ஆனால் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ள அவர்களை தற்போதுஅவர்களின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மிகக் கொடூரமானமுறையில் கொலை செய்து உடலை தெருவில் வீசியுள்ளனர். இதனைப் நேரில்பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.