கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவி வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவால் சாதாரண மக்கள் மட்டும் அல்லாமல் மருத்துவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் . கடந்த வருடம் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் அவர் உடலை வேலக்காடு மயானத்தில் அடக்கம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மருத்துவர் சைமனின் உடலை தோண்டி எடுத்து கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.