மதுஅருந்திவிட்டு இருசக்கரவாகனத்தில் சென்ற வாலிபர் மீது வழக்கு பதிவு செய்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
சென்னை ஆவடி,கோவில் பதாகை வண்ணக்குளம் தெருவை சேர்ந்த 23 வயதுடைய கோமத் ஒலாவில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு புரசைவாக்கத்தில் இருந்து பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் ஆவடி செல்லும் போது வழியில் கீழ்பாக்கம் கெங்கு ரெட்டி சுரங்கபாதை சிக்னலில் காவல் துறையினர் கோமத்தை மறித்து சோதனை செய்தனர்.அப்போது அவர் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தை ஒட்டியது தெரியவந்தது.
இதையடுத்து கீழ்பாக்கம் போக்குவரத்து காவல் துறையினர் கோமத் மீது வழக்குபதிவு செய்தனர். அதன்பின் கோமத் வந்த இரு சக்கரவாகனத்தை பறிமுதல் செய்தனர் , இதனால் போதையில் இருந்த கோமத் கோபம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபடுள்ளார். இதையடுத்து காவல் கட்டுபாட்டு அறைக்கு தொடர்புகொண்ட கோமத் தான் தற்கொலை செய்வதாக மிரட்டியுள்ளான் .பின்னர் கோமத்திடம் காவல் துறையினர் தொடர்புகொண்டு பேசிய போது தான் வீட்டுக்கு வந்ததாக கூறியுள்ளார் .அதன்பின் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் கடை ஒன்றில் பூச்சிமருந்து வங்கி குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த கோமத்தை அவரது நண்பர் தீபக் கோயம்பேடு அரசுமருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளார். அதன்பின் காவல்துறையினர் கோமத்திடம் சென்று விசாரித்தபோது போக்குவரத்து காவலர் அசிங்கமாக பேசியதால் தற்கொலைக்கு முயன்றதாக வாக்குமுலம் அளித்துள்ளார். இது தொடர்பான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.