பாரதி கண்ணம்மா சீரியல் நட்சத்திரங்களுடன் குக் வித் கோமாளி பிரபலங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் குறிப்பாக பாரதிகண்ணம்மா சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் சாதனை படைத்து வருகிறது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா, பவித்ரா ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் யார் இந்த சீசனின் வெற்றியாளர் என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்.
இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் நட்சத்திரங்களுடன் குக் வித் கோமாளி பிரபலங்கள் பாலா, சிவாங்கி, சரத் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. மேலும் அதில் ராஜா ராணி சீரியல் நடிகர், நடிகைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . ரசிகர்களை கவர்ந்த இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .