நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதைஎடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் 9 முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் 9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லாமலேயே ஆல்பாஸ் என்று தமிழக அரசு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டது.
இதனால் 10 அம வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் எப்படி கணக்கிடுவது என்பது குறித்த குழப்பம் நிலவி வந்தது. இதையடுத்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை தற்போது வழங்க பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் 11ஆம் வகுப்பு சேர மதிப்பெண்கள் கணக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களையே தற்போதும் வழங்க ஆலோசிக்கப்படுகிறது.