பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் குடும்ப பிரச்சனையில் பெண் விஷ மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூர் பகுதியில் ராஜூ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகம் (48) என்ற மனைவி இருந்தார். இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சில நாட்களாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் கனகம் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன்பின் அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கனகம் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.