அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானத்தின் மீது பறவை மோதியதால் அதன் எஞ்சின் செயலிழந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கூடைப்பந்து அணி வீரர்கள் உதாஹஜஸ். இவர்கள் மெம்பிஸ் க்ரிஸ்லிஸ் அணியுடன் விளையாடுவதற்காக டெல்டா 8944 என்ற விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த விமானம் சால்ட் லேக் நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென எதிரே வந்த பறவையின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தின் எஞ்சின் செயலிழந்துள்ளது. இதனால் விமானிகள் அவசர அவசரமாக விமானத்தை சால்ட் லேக் விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளனர்.
இதுகுறித்து விமான அதிகாரி ஒருவர் கூறியதாவது “பறவை விமானத்தின் மீது வந்து மோதியதால் விமானத்தின் முன் பகுதியில் ரத்தக் கரை ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் விமானம் பழுது பார்ப்பதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால் விமான கட்டுப்பட்டு குழு உதாஹஜஸ் அணி வீரர்களை வேறு ஒரு விமானத்தில் மெம்பிஸ் நகரத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.