Categories
மாநில செய்திகள்

கொரானா பாதிப்பால் உயிரிழந்த டாக்டர் சைமன் கடைசி ஆசை….உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!

கொரோனாதொற்றுக்கு சிகிச்சை அளித்து வந்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சைமன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தனியார் மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தவர் டாக்டர் சைமன் இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து இவருக்கும் கொரோனா தொற்று  தீவிரமாக பரவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று டாக்டர் சைமனின் உயிர் பிரிந்தது.

மேலும் கொரோனா தொற்று பாதித்து இறந்த காரணத்தினால் இரண்டு மயானங்களில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காவல்துறையின் பாதுகாப்புடன் சைமனின் உடலை வேலங்காடு மயானத்தில் புதைத்தனர். சைமனின் மனைவி ஆனந்தி என் கணவர் உடலை மண்ணில் புதைக்கும் போதும் கூட என்னால் பார்க்க முடியவில்லை என்று உணர்ச்சி மிகுந்த மன வலியுடன் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

டாக்டர் சைமன் என்னுடன் இறுதியாக வீடியோ அழைப்பில் பேசும்போது ஒரு வேளை நான் மீண்டு வரவில்லை எனில் தனது உடலை மத சடங்குகளுடன் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யுமாறு கூறினார் என்று ஆனந்தி தெரிவித்தார். ஆனால் தனியார் நிர்வாகம் டாக்டர் சைமன் உடலை புதைக்க மறுத்துவிட்டது.

ஆகையால் தன் கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆனந்தி சைமன் உருக்கத்துடன் முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தார். தற்போது ஆனந்தி சைமனின் வேண்டுகோளை ஏற்று உயர்நீதிமன்றம் வேலங்காடு சுடுகாட்டில் புதைத்த  டாக்டர் சைமனின் உடலை பாதுகாப்பான முறையில் தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயான தோட்டத்தில் அடக்கம் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |