கனடாவில் உள்ள மூன்று தங்கும் விடுதிகளில் அடுத்தடுத்து தீ பற்றி எரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் வன்கூவர் பகுதியில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதி ஒன்றில் மார்ச் 30ஆம் தேதியன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்ததுள்ளது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள இரண்டு தங்கும் விடுதியில் தீப்பற்றி எரிந்ததுள்ளது. இதனால் அங்கு இருந்தவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
அத்தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தங்கும் விடுதியில் பற்றி எரியும் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் பெட்ரோல் கேனுடன் சந்தேகப்படும் படியாக சுற்றிக்கொண்டிருந்த 42 வயது நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.