மேற்கு மற்றும் மத்திய மண்டல ஐஜி களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தப்படும் தொகுதிகளில் அதிகாரிகளை நியமித்து கண்காணித்து வருகின்றனர்.
பல அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டு வருகின்றனர். மேற்கு மண்டல ஐ.ஜி தினகரன், மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம் ஆகியோரை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் கோவை புறநகர் எஸ்.பி அருளரசை சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு மாற்றியுள்ளது. மேலும் தினகரன் ஜெயராம் மற்றும் அருளரசு ஆகியோரை காத்திருப்பு பட்டியலில் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.