கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து வரும், சாஃப்ட் சிக்னல் பிரச்சனை ,ஐபிஎல் போட்டியில் நடைபெறாது என பிசிசிஐ அறிவித்தது.
14வது ஐபிஎல் 2021 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் தொடரானது , வருகின்ற 9ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தப்போட்டியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் ,பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது . அதன்படி 20 ஓவர்களில் பவுலிங் செய்யும், வீரர்கள் 90 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அந்த அணியிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும். இந்தத் தவறை முதலில் செய்தால் ,அந்த அணியின் கேப்டனுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும்.
இந்த தவறை 2வது முறை செய்தால், அணியின் கேப்டனுக்கு ரூபாய் 24 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும், அதுமட்டுமல்லாது அந்த அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது போட்டி விளையாடுவதற்கான கட்டணத்தில் 25% குறைக்கப்படும் . அதே அணி இந்த தவறை 3வது முறை செய்தால் , அந்த அணியின் கேப்டனுக்கு ரூபாய் 30 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதோடு , ஒருநாள் தொடரில் அவர் விளையாடுவதற்கு தடை செய்யப்படும். அதோடு அந்த அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் ரூபாய் 12 லட்சம் அபராதம் அல்லது 50% அபராதம் விதிக்கப்படும்.
இதைத்தொடர்ந்து நடுவர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் 3-வது நடுவர்களிடமிருந்து முடிவுகள் வரும்வரை ,கள நடுவர்கள் வீரர்களுக்கு சாஃப்ட் சிக்னலை கொடுக்கக் கூடாது. ஆனால் களத்தில் உள்ள நடுவர்கள், கொடுக்கும் நோ பால், அவுட் போன்ற முடிவுகளில் 3வது நடுவர்கள், தொழில் நுட்பத்தின் மூலம் ஆராய்ந்து கள நடுவர்கள் எடுக்கும் முடிவுகளில் பங்கு பெறலாம். இவ்வாறு ஐபிஎல் தொடரில் புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ கொண்டுவந்துள்ளது.