தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜக தன்னை ஏற்றுக் கொண்டதாக கூறியுள்ளார். பாஜகவும் ஆன்மீகம் தான். தானும் ஆன்மீகத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளதால் என்னை பாஜக ஏற்றுக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார். தேர்தலுக்குப் பின் நிலைமையை பொறுத்து பாஜகவுக்கு மாற திட்டமிடுகிறார் என்று சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.