Categories
லைப் ஸ்டைல்

ஆவி பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?… படிச்சா அசந்து போயிருவீங்க…!!!

ஆவி பிடிப்பதால் உடலில் உள்ள பல நோய்கள் குணமாவது மட்டுமல்லாமல் முகம் பொலிவு பெறும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்கள் சிலர் உடல் சோர்வு, தலைவலி, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்கள். அதிலும் சிலர் ஆவி பிடிப்பதால் நோய்களை விரட்டி அடிக்கிறார்கள். ஆனால் ஆவி பிடிப்பதில் உள்ள நன்மைகளை பற்றி யாரும் அறிவதில்லை. அதுபற்றி இப்போது அறிந்து கொள்ளுங்கள்.

ஆவி பிடிப்பதால் சளி, காய்ச்சல், தலைவலி குணமடைவதுடன், ரத்த ஓட்டம் சீராகி சருமம் பொலிவுபெறும். 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து பிறகு ஒரு மெல்லிய துணியால் நன்றாக துடைத்து வர கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கும். மேலும் 4 முதல் 5 நிமிடம் ஆவி பிடித்து வருவதால் முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி சருமம் பொலிவுபெறும். அதனால் ஆவி பிடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

Categories

Tech |