ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோருக்கு nomophobia என்ற வியாதி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம் இல்லை என்றால் மனிதர்களே இல்லை என்ற அளவிற்கு தொழில்நுட்பம் மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஒட்டி காணப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் நாம் பயன்படுத்துகின்ற அளவை வைத்து ஒவ்வொரு விதமான போபியா வியாதி தாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் தற்போது அனைவராலும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் என்றால் அது ஸ்மார்ட்போன் தான் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் மனிதர்களால் ஒருநாள்கூட தாண்டி இருக்க முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் ஒரு சிலருக்கு ஸ்மார்ட்போன்கள் இல்லை என்றால் ஏதோ பெரிய இழப்பு ஏற்பட்டது போல் உணர்கிறார்கள்.
அவர்களால் சில மணி நேரம் கூட ஸ்மார்ட் போன் இல்லமால் இருக்கவே முடியாது. இது ஒரு வகையான வியாதி என்றும், இவ்வியாதிக்கு நோமோஃபோபியா என்றும் ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். இதேபோன்று சைபர்போபியா என்ற மற்றொரு வியாதியும் உண்டு. இது இன்டர்நெட்டின் மேல் அதிக பயத்தையும் வெறுப்பையும் யார் கொண்டுள்ளார்களோ அவர்களுக்கு இவ்வகையான வியாதி இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.