Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பேருந்து சேவை… இன்று முதல் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் சேவை தொடங்குகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது. அதுமட்டுமன்றி ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கான சிறப்பு பேருந்து சேவை இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி இன்று முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை பிற ஊர்களுக்கு 14,215 சிறப்பு பேருந்துகளும், கோவை, திருப்பூர் மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,644 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்திலும், TNSTC என்ற செயலியிலும் முன்பதிவு செய்யலாம்.

Categories

Tech |