சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதிதாக மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நகரத்தில் ஒரு பெண்ணுக்கும், ஒரு ஆணுக்கும், சிங்கம்புணரி அருகே உள்ள ஒடுவன்பட்டி பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா தொற்று தொடர்ச்சியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் சிகிச்சைக்காக சிவகங்கை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து சிங்கம்புணரியில் உள்ள பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் நபிஷாபானு கூறியுள்ளார். முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி சிங்கம்புணரி பாரிவள்ளல் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பள்ளியின் முதல்வர், மாணவ-மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.