Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அடடே எங்க ஊரு அவ்ளோ பிடிச்சிருக்கா… பிரமிக்கவைக்கும் கோல்டன் ப்ளோவ்…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்….!!

திருப்பூரில் நடத்தப்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் புதிய அரிய வகையான பறவை இனம் கண்டுபிடிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான பறவைகள் கணக்கெடுப்பு நஞ்சராயன் குளம் என்னும் கிராமத்தில் நடத்தப்பட்டது. அந்த கணக்கெடுப்பின் போது மொத்தம் 74 வகை பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. இதில்’ பசுபிக் கோல்டன் ப்ளோவ்’ என்னும் அரிய வகை பறவை கண்டறியப்பட்டுள்ளது. இப்பறவை அதிகமாக கடற்கரை பகுதிகளில் மட்டுமே அதிகமாக காணப்படும். திருப்பூரில் இப்பறவையை காண்பது மிகவும் அரிதான ஒன்று. மேலும் இப்பறவை ஐரோப்பியாவில் இருந்து மீண்டும் தனது இடத்திற்கு திரும்பி செல்லும் போது  இங்கு வந்திருக்கலாம் என திருப்பூர் இயற்கை கழகத் தலைவர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறும்போது, கடந்த 10 வருடங்களில்  திருப்பூரில் மட்டும் 185 வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த வருடம் மட்டும் பசுபிக் கோல்டன் ப்ளோவ் பறவையுடன் சேர்த்து கருவல்வாத்து, சிவபுத்திரா என இரண்டு புதிய அரிய வகையான பறவைகளும் கண்டறியப்பட்டுள்ளன என மகிழ்சியுடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |