Categories
சினிமா தமிழ் சினிமா

JUST IN: ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது… ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

இந்திய சினிமாவில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்திற்கு வழங்கப்பட உள்ளது.

இந்திய சினிமா துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. இதனை நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம் பெற்றுள்ளார்.

இந்திய சினிமாவின் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ளார். இந்த செய்தி தமிழ் திரையுலகம் மட்டுமன்றி ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |