தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெப்பநிலை உயர்கிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த வெப்பநிலையா உயர்வின் காரணமாக அனல் காற்று வீசக்கூடும் என்றும், அடுத்த நான்கு நாட்களுக்கு தினமும் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் கடுமையான வெயில் சுட்டெரிக்கும் என்பதால் மக்கள் யாரும் மதிய வேளையில் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.