தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியினரும் மாறி மாறி குறைகூறிக்கொண்டு மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தேர்தல் அறிக்கையில் மக்களை ஈர்க்கும் வண்ணம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டனர்.
அந்தவகையில் அதிமுக தேர்தல் அறிக்கையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த்திருந்தார். இந்நிலையில் இன்று முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கும் திட்டம் அமலாகிறது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.