மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியிலிருந்து மாரி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகின்றார்.
இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தின் தற்போதைய முதலமைச்சர் பதவியில் மம்தா பானர்ஜி பணியில் உள்ளார். இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற ஆட்சியில் கட்சியின் முதன்மை நிர்வாகியாக பணியாற்றி வருகின்றார். மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் இவர் பவானியில் தொகுதியில்தான் போட்டியிட்டு வந்துள்ளார். ஆனால் இந்த முறை அவர் தொகுதியை மாற்றி நந்தி கிராமத்தில் போட்டியிடுகின்றார்.
அதுதொடர்பாக நேற்று நந்தி கிராமத்தில் மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்து வருகின்றார். அப்போது அவர், “இது என்னுடைய இடம், இதை நான் விட்டு போக மாட்டேன்” என்று ஆவேசத்துடன் பேசினார். இந்த தொகுதி இரண்டாம் கட்ட தேர்தலை 1-ந் தேதி சந்திக்க தயாராக இருக்கின்றது. இந்த தொகுதியில் நடத்தப்பட்ட 3 தேர்தல்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று இந்த முறையும் வெற்றி வகையைச் சுடுமா? என்ற கேள்வி மாநிலமெங்கும் எதிரொலிக்கின்றது. இங்கு மம்தாவுக்கும், சுவெந்து அதிகாரிக்கும் இடையே தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து பலத்த போட்டி நிலவுகின்றது.
இந்நிலையில் மம்தா பானர்ஜி நேற்று நந்தி கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ஆவேசமாக பேசியுள்ளார். அப்போது அவர் பேசியது என்னவென்றால், இந்தத் தொகுதி மக்கள் அனைவரும் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் நந்தி கிராமத்துக்குள் நுழைந்து விட்டேன் என்றாள் இனி நான் இந்த கிராமத்தை விட்டு எங்கும் போக மாட்டேன். நந்திகிராமம் தான் எனது இடம் இங்குதான் நான் இருப்பேன். நான் வேறு ஒரு தொகுதியிலிருந்து வேண்டுமானாலும் போட்டியிட்டு இருந்திருக்க முடியும்.
ஆனால் நான் இந்த இடத்தில் இருக்கும் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் எனது மரியாதையை தெரிவிக்கும் எண்ணத்தில் தான் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளேன். நந்திகிராமம் இயக்கத்துக்கு வணக்கம் தெரிவிப்பதற்காக நான் இந்த தொகுதியை எனது விருப்பத்துடன் தேர்வு செய்துள்ளேன். அதன்பின் பாரதிய ஜனதா கட்சியை அரசியல் ரீதியாக புதைத்து விட்டு, இந்த நந்தி கிராமத்தில் இருந்தும், மாநிலத்தில் இருந்தும் வெளியேற்றுங்கள் என்று மம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்தில் இவ்வாறு பேசியுள்ளார்.