சேலம் மாவட்டத்தில அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைப்பெற்றுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள இளம்பிள்ளை பகுதியில் மாரியம்மன், காளியம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. அந்த கோவிலில் கடந்த 16 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டதுடன், இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து நேற்று சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து காளியம்மன் கோவிலில் தீ குண்டத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளனர். இந்த திருவிழாவில் இளம்பிள்ளை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர்.