12-15 வயதுடைய சிறுவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 100% பலனளித்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
உலகில் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி திட்டம் முதியவர்களுக்குதான் அதிகமாக செயல்பட்டு வருகின்றது. பிரிட்டனில் சுமார் 80 வயதிருக்கும் அதிகமான முதியவர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின்பு அனைத்து குடிமக்களுக்கும் படிப்படியாக அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை 16 வயதிற்கு அதிகமான நபர்களுக்கு செலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதைவிட குறைந்த வயது நபர்களுக்கு தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் சோதனைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 12 வயதிலிருந்து 15 வயதுக்குட்பட்ட சுமார் 2260 சிறுவர்களுக்கு செலுத்தப்பட்டது. அதில் கொரோனா தொற்று அவர்களுக்கு ஏற்படவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சிறுவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 100% பலனளித்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே தங்கள் தடுப்பூசியை உடனடியாக செலுத்துவதற்கான முன்னேற்பாடுகளை விரைவாக்க வேண்டுமென்று பைசர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பைசர் நிறுவனம் சிறுவர்கள் அடுத்த கல்வியாண்டில் பள்ளி செல்வதற்கு முன்பு தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளது.