இந்தோனேசியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் அமைந்துள்ள பெர்டாமினாவின் பலோங்கன் என்ற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று அமைந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்னரே அந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதனால் அந்த ஆலையில் இருந்து விண்ணைத்தொடும் அளவிற்கு நெருப்பும் கரும்புகையும் வெளியாகியது. இந்நிலையில் ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த தீ விபத்தில்5பேர் சிக்கி படுகாயமடைந்தனர்.
மேலும் எண்ணெய் ஆலைக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் மக்கள் 902 பேரை வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அப்போது சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது. அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் பலரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் தீயணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அந்தத் தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன் பிறகு தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு பிறகும் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் நாலாபுறமும் இருந்து தண்ணீரை பீச்சி அடித்து போராடி வருகின்றனர்.