Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தனியா நின்னதுல இவ்ளோ இருந்திருக்கா…. அடித்து பிடித்து ஓடிய லாரி டிரைவர்…. ரோந்தில் தூக்கிய பறக்கும் படையினர்….!!

ராணிப்பேட்டையில் பறக்கும் படையினர் சுமார் 199 அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பதற்காக மக்களுக்கு பணமோ அல்லது பரிசு பொருட்களோ வழங்காமலிருக்க தேர்தல் குழு பறக்கும் படையினரை நியமித்தது. இதனால் இவர்கள் அனைத்து பகுதிகளிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஏற்காட்டில் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு தனியாக நின்றுகொண்டிருந்த லோடு வேனை பறக்கும் படை அதிகாரிகள் பார்த்தனர். இதனால் அவ்வேனை அதிகாரிகள் சோதனை செய்ய சென்றபோது லாரி ஓட்டுனர் அவர்கள் வருவதை கண்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து அதிகாரிகள் செய்த சோதனையில் சுமார் 10 கிலோ எடையுடைய 199 அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. அதன்பின் பறக்கும் படையினர் அவ்வேனிலிருந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |