ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை பண பரிமாற்ற செயலிகளுக்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஏப்ரல் 2 முதல் 6ம் தேதி வரை பணம் பரிமாற்ற செயலிகளுக்கு தடை விதிக்கக் கோரி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் கோரிக்கை மனு அளித்துள்ளார். கூகுள் பே, போன்பே, பேடிஎம், அமேசான் பே போன்ற செயலிகள் மூலம் பலர் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முயற்சியில் கட்சியினர் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க பணம் பரிமாற்ற செயல்களுக்கு தடை விதிக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.