ஈரமான ரோஜாவே சீரியல் நடிகரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் சீரியல் ஈரமான ரோஜாவே . சமீபத்தில் இந்த சீரியல் நிறைவடைய போவதாக தகவல்கள் பரவி வந்தது. ஆனால் அந்த தகவல் உண்மையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வரும் திரவியம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இந்நிலையில் நடிகர் திரவியம் நீண்ட தாடி, மீசை வைத்து கெத்தாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் திரவியமா இது ?அடையாளமே தெரியலையே என கருத்து தெரிவித்து வருகின்றனர்.