பிரிட்டன் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியின் திருமணம் குறித்த உண்மையை கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்வி வெளிப்படுத்தியுள்ளார்.
பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ஓப்ரா வின்ஃப்ரேயுடனான நேர்காணலில் எங்களுக்கு சட்டபூர்வமாக திருமணம் நடைபெறுவதற்கு மூன்று தினங்களுக்கு முன் நாங்களாகவே திருமணம் செய்து விட்டோம் என்றும் கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்வியை தவிர வேறு யாரையும் நாங்கள் அழைக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும் பேராயர் ஜஸ்டினின் முன்னிலையில் எங்களது அறையில் வாக்குறுதிகளை நாங்கள் பரிமாறினோம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்வி ஐரோப்பிய பத்திரிக்கை ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.
அதில் அவர் ஹரி-மேகன் திருமணம் தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, கடந்த 2018 ஆம் வருடம் மே மாதம் 19 ஆம் தேதி அன்று விண்ட்ஸர் மாளிகையில் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்ட இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினரை அதற்கு முன்பு தனியாக பல முறை சந்தித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் சட்டபூர்வமான திருமண நாளை விடுத்து பிற நாட்களில் திருமண சான்றிதழில் நான் கையொப்பமிட்டால், அது கடும் குற்றம் என்று தெரிவிதுள்ளார். எனினும் திருமண நாளிற்கு முன்பு நாங்கள் சந்தித்தபோது என்னவெல்லாம் நடந்தது என்று நான் சொல்ல மாட்டேன் என்று மறுத்துள்ளார்.