தமிழகம் முழுவதும் சுங்கச் சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் சுங்கச் சாவடிகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கப்பலூர், சாத்தூர் உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் ஐந்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.