Categories
மாநில செய்திகள்

வாயில் ரூபாய் நோட்டை திணித்த துணை சபாநாயகர் … ”கதறிய சிறுவன்” வெளியான சர்ச்சை வீடியோ..!!

 தெலுங்கானாவின் துணை சபாநாயகர் சிறுவனை பாராட்டும் விதமாக  வாயில் ரூபாய் நோட்டுகளை திணித்த  வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . 

தெலுங்கானாவில் செகந்திராபாத் இல் நடைபெற்ற கோனலு  எனும் திருவிழா கொண்டாட்டத்தின்போது டிரம்ஸ் கருவியை வாசித்துக் கொண்டிருந்த சிறுவனை அங்கு இருந்தவர்கள் கைதட்டி பாராட்டி கொண்டிருந்தனர். பின்னர் , தெலுங்கானாவின் துணை சபாநாயகர் பத்மராவ்கவ் அந்த சிறுவனை பாராட்டும் வகையில் அவனது வாயில் ரூபாய் நோட்டுகளை திணித்தார்.

Image result for தெலுங்கானா துணை சபாநாயகர்

இந்தச் சம்பவம் நிகழ்ந்த போது எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆனதை அடுத்து இந்நிகழ்விற்கு  பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பத்மாராவ்கவ் தான் இவ்வாறு செய்வது வழக்கம் என்றும், தான் செய்தது தவறில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். இவர் கூறிய பதில் தற்பொழுது தெலுங்கானா மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

Categories

Tech |