Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இந்த ஐடியா கூட நல்லா இருக்கே… 100% வாக்குபதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி…. அதிகாரிகளின் புது முயற்சி…!!

100 சதவீத வாக்குப்பதிவை உறுதிபடுத்தும் வண்ணம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்லடம் ரோட்டில் மாரத்தான் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனால் தேர்தல் அதிகாரிகள் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மிகவும் சிறப்பான முறையில் செய்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு  100% வாக்குபதிவை உறுதிபடுத்தும் வண்ணம்  தனியார் அமைப்பினர் மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய் அதிகாரி சண்முக மூர்த்தி தலைமையில் மாரத்தான் போட்டி மிக சிறப்பாக தொடங்கப்பட்டது.

இப்போட்டியானது  பல்லடம் ரோட்டில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் மற்றும் புஷ்பா சந்திப்பு வரை, சிறுவர்கள், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என அனைத்துப் பிரிவினரும் கலந்துகொள்ள மிக சிறப்பாக நடைபெற்றது. பின்னர் போட்டியின் முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளார்.

Categories

Tech |