தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எனவே அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. என மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையும் மீறி அதிமுக அமைச்சர்கள் சிலர் பொதுமக்களுக்கு கூகுள்பே, போன் பே, அமேசான் பே போன்ற செயலிகள் மூலமாக பணம் வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இதனை தடுக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலருக்கு வழக்கறிஞரான சுப்பிரமணியம் என்பவர் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் அதிமுக அமைச்சர்கள் சிலர் பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணத்தை கூகுள் பே, போன் பே, அமேசான் ஆப் மூலமாக வழங்கும் திட்டம் இருப்பதாக தெரிகிறது. எனவே நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தேர்தல் ஆணையம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு தவறினால் இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நேரிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.