Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள் வேலை திட்டம்”… ஆத்தூர் தொகுதியில்… தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. பிரச்சாரத்தின் போது பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தொடங்கப்படும் என்று பேசினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. இ.பெரியசாமி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் செட்டியபட்டி, ஸ்ரீராமபுரம், வெள்ளமடத்துப்பட்டி, கரியகவுண்டன்புதூர், சங்கரலிங்கபுரம், ராஜாபுதூர், ஆதிதிராவிடர் காலனி, குள்ளம்பட்டி, கணபதிநகர், அரசமரத்துப்பட்டி, போலியனூர், திருமலை நகர், கருப்பிபடம் ஆகிய கிராமங்களில் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தி.மு.க. வேட்பாளர் இ.பெரியசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர் பொதுமக்களிடையே பேசியதாவது;- ஸ்ரீராமபுரம் பேரூராட்சியை சேர்ந்த 1,360 பேருக்கு நான் அமைச்சராக இருந்தபோது முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு நான் எடுத்த முயற்சியால் உதவித்தொகை மீண்டும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பேரூராட்சி பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தொடங்கப்படும். கூலி ரூ. 300 ஆக உயர்த்தப்பட்டு, பணி நாட்கள் 150 நாள் ஆக மாற்றி அமைக்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு ஸ்ரீராமபுரம் பகுதியில் வீடு கட்டித் தரப்படும். கோம்பையில் கிணறு வெட்டி இங்குள்ள மக்களின் குடிநீருக்காக அங்கிருந்து தண்ணீர் வழங்கினேன். மேலும் மீண்டும் எம்.எல்.ஏ.வாக நான் பொறுப்பேற்றால் போலியமனூரில் குடிநீர் தொட்டி கட்டி தரப்படும். இதேபோல் தி.மு.க. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும். தமிழக அரசு கொரோனா காலத்தில் எந்த உதவியும் செய்யவில்லை. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரண நிதியாக குடும்பத்துக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். நான் உங்கள் வீட்டில் ஒருவன் நீங்கள் எந்த நேரம் குரல் கொடுத்தாலும் நான் ஓடோடி வருவேன். ஆகவே எனக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று கூறினார்.

Categories

Tech |