Categories
சினிமா தமிழ் சினிமா

முக்கிய நிகழ்ச்சியில் கண்கலங்கிய குக் வித் கோமாளி சிவாங்கி… எதற்காக தெரியுமா?… வைரலாகும் வீடியோ…!!!

குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி வருத்தப்படாத வாலிபர் சங்கம் நிகழ்ச்சியில் கண்கலங்கி பேசியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களும் கோமாளிகளும் சேர்ந்து செய்யும் கலாட்டா ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக அஸ்வின், சிவாங்கி இருவரும் செய்யும் க்யூட்டான குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற பெயரில் விஜய் தொலைக்காட்சியின் விருதுகள் நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் கண்கலங்கி பேசிய சிவாங்கி ‘ஸ்கூல்ல இந்த குரலுக்காக பலரும் என்னை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். நண்பர்கள் என்னை கேலி செய்தார்கள். ஆனால் இன்று என்னை அனைவரும் தங்கள் வீட்டு குழந்தையாக நினைத்து ஆசீர்வாதம் செய்கின்றனர் . எங்கே சென்றாலும் பெரியவர்கள் என்னை சிவாங்கி பிள்ளை என்றுதான் அழைக்கிறார்கள்’ என்று கூறுகிறார்.

 

Categories

Tech |