நாடு முழுதும் கொரோனா பரவல் கடந்த வருடம் கோரதாண்டவமாடி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்த சமயத்தில் கொரோனா மீண்டும் வேகம் எடுத்துள்ளது.
இதனால் ஒரு சில மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சி காந்தி காய்கறி மார்க்கெட்டில் 4 வியாபாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதை தொடர்ந்து மார்க்கெட்டை மூட மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும் மார்கெட்டிலுள்ளா 300 வியாபாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.